தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை: மக்கள் பீதி

கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து…

கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை தாக்கி வருகின்றன. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கொட்டக்கம்பை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டத்தில் வலம் வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற தொழிலாளர்கள், ஒற்றை யானையால் அச்சமடைந்து வீடு திரும்பினர்.

பொதுமக்களை அச்சுறுத்திவரும் இந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.