இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் சில மாநிலங்களில் தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 643 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக் கை 3,18,56,757 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,096 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,10,15,844 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 4,14,159 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 2.41 ஆகவும், தினசரி பரவல் வீதம் 2.72 ஆகவும் உள்ளது. நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 3,18,56,757, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 464 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,26,754 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவது இதுவரை 49,53,27,595 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 57,97,808 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.








