அந்நிய முதலீட்டு முறையில் விதிமுறைகளை மீறியதாக, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம், அன்னிய முதலீட்டில் விதிமீறல்கள் செய்துள்ளதாக அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட்டின் கூட்டணி விற்பனை நிறுவனமான WS ரீட்டைல் நிறுவனம் ஈகாமர்ஸ் தளத்தில் செய்து வரும் வர்த்தகம் இந்திய வர்த்தகச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டது என்றும் அமலாக்க துறை கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விதி மீறல்களுக்காக அமலாக்கத் துறை சுமார் 1.35 பில்லியன் டாலர் (சுமார் 10 ஆயிரத்து 600 கோடி) அளவில் அபராதம் விதித்திருந்தது. இதைச் செலுத்தத் தவறியதால், தற்போது அமலாக்கத் துறை பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால், நிர்வாகம் செய்யும் முதலீட்டாளரான டைகர் குளோபல் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்திய அரசின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளளின் அடிப்படையில்தான் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எந்த விதிகளையும் மீறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.