ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயில் இணை ஆணையர் தலைமையில் எண்ணப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் விளங்கி வருகிறது. கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில், 65 லட்சத்து 44 ஆயிரத்து 87 ரூபாய் ரொக்கமும், 110 கிராம் தங்கமும், 825 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்தன.
உண்டியல்களில் இருந்து கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவதொண்டன் குழுவினர்களால் பிரித்தெடுக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் வங்கியில் செலுத்தப்பட்டது.








