இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 16,671 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,52,745 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,032 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி யுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,02,351 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,03,476 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,42,786 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இதுவரை 85,60,81,527 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







