உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் எதிரில், ‘பாரம் பரிய நடைபயணம்’ நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த நடைபயணத்தில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களான செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கோட்டை அருங்காட்சியகம், செயின்ட் ஜார்ஜ் சர்ச் மற்றும் கோட்டை கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங் களையும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
இந்த நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாளை உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப் படுவதால், பாரம்பரிய நடை பயணம் இன்று துவக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டிடங்களை நடைபயணமாக சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் கட்டிடங்களின் வரலாறு பற்றி மாணவர்கள், பொதுமக் களுக்கு விளக்க உள்ளார். மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் நீர் விளையாட்டுக்களை துவக்குவது பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பின், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மானியக் கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.







