முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த இரு நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப் போது மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22, 842 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 25,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,30,94,529 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 2,70,557 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 277 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,48,817 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90,51,75,348 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

தனது காதலியுடன் நட்பாக பழகியவரை கொலை செய்த இளைஞர்

Jeba Arul Robinson

”இந்தியர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்’- ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்!

Jayapriya

இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!

Niruban Chakkaaravarthi