முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த தொற்று நேற்று 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் , 15,823 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 3,40,01,743 ஆக அதிகரித் துள்ளது. ஒரே நாளில், 22,844 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 901 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 96,43,79,212 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,63,845 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்த திரைப்பிரபலங்கள்!

Halley karthi

இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Halley karthi

“ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பி

Halley karthi