இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. மொத்தம் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 46, 81, 561 ஆக அதிகரித்துள் ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8, 834 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3, 40, 69, 608 ஆக அதிகரித்துள் ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 98, 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட 211 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4, 73, 537 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 24,55,911 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,93,09,669 ஆக இருக்கிறது.
Advertisement: