இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி; பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் சர்வதேச  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய பி வி சிந்து  தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக  தோல்வியை தழுவி வெளியேறினார். இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று  தொடங்கி…

இந்திய ஓபன் சர்வதேச  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய
பி வி சிந்து  தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக  தோல்வியை தழுவி வெளியேறினார்.

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று  தொடங்கி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ்  ஆகர்ஷி காஷ்யப் உள்ளிட்ட பல வீரர்கள்  பங்கேற்கிறார்கள். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.7½ கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட  காயம் காரணமாக  5 மாத ஓய்வுக்கு பிறகு கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற மலேசிய  ஓபன் டென்னிஸ் போட்டியில்  விளையாடினார். துரதிர்ஷடவசமாக  சிந்து முதல் சுற்றிலேயே தோற்று ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தார்.

இதனிடையே கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கியது.  இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் களமிறங்கிய பி வி சிந்து  தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக  தோல்வியை தழுவி வெளியேறினார்.

தாய்லாந்து வீராங்கனை சுபனிடா கேத்தோங் உடன் மோதிய சிந்து, அடுத்தடுத்து இரண்டு செட்டுகளையும், 14-21, 20-22 என்ற கணக்கில்  தோல்வியடைந்தார். இதனால் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  முதல் சுற்றிலேயே பி வி சிந்து வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.