சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும்-ஆய்வாளர்கள்

இந்தியாவில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24…

இந்தியாவில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 6,358 ஆக இந்த எண்ணிக்கை பதிவாகியிருந்தது. ஒப்பீட்டளவில் தொற்று பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.

இதுவரை 143 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், மொத்த பாதிப்பு 781ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 21 மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேரும் இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 167 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரிக்கும் என்றும் ஆனால் இது குறைந்த கால அளவிலேயே நீடிக்கும் என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியின் பேராசிரியர் பால் கட்டுமன் எச்சரித்துள்ளார்.

மேலும் புதிய பாதிப்புகள் ஒரு சில நாட்களில் அதிகரிக்கும் என்றும், இந்த வாரத்திலேயே கூட இது நிகழும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கட்டுமன் மற்றும் அவரது குழுக்கள் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

FILE

ஏற்கெனவே தொற்று பாதிப்பு 6 மாநிலங்களில் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தொற்று பரவல் விகிதம் 5%க்கும் அதிகமாக உள்ளது என்றும் இந்த குழு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு 11 மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வரை 4,80,592 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.