உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு: கீதா ஜீவன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்டல அளவிலான துணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்டல அளவிலான துணை இயக்குநர் அலுவலகத்தை சமூக நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உசிலம்பட்டி பகுதியில் மட்டும் தொடர்ந்து சிசுக் கொலைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைகள் நலக்குழு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து சிறப்பு குழு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.