100% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி – இலக்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியா

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும்…

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக தொடங்கியது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரப்டுத்தப்பட்டது. இதன் காரணமாக, இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியை கடந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் 100 விழுக்காட்டினருக்கு 2 டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/MoHFW_INDIA/status/1495253136180903936

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதியதாக 19 ஆயிரத்து 968 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கை விட வெகுவாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.