முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோகித்; சேத்தன் சர்மா புகழாரம்

ரோகித் சர்மா நாட்டின் முதன்மையான கிரிக்கெட் வீரர் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்தார். 

இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளை இந்திய அணி  வென்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக்குழு, அணியை ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வழிநடத்துவார் என தெரிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, “ரோகித் சர்மா நாட்டின் முதன்மையான கிரிக்கெட் வீரர். தேர்வுக்குழுவில் அனைவரின் விருப்பமும் அவரை கேப்டனாக்குவதுதான். அது மட்டுமின்றி அவர் தலைமையில் இன்னும் பல கேப்டன்கள் உருவாகுவார்கள்” என தெரிவித்தார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்,  புஜாரா மற்றும் ரஹானே உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram