நெதர்லாந்தை சேர்ந்த ஓரினச் சேர்க்கை தம்பதிகள், தங்களது 20 வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளனர். உலக அளவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள் இவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது.
நெதர்லாந்தை சேர்ந்த கெர்ட் கஸ்டீஸ் , டோஸ்ஃ பேஸ்கர், இருவரும் தன்பாலின திருமணம் செய்து தற்போது 20 வயது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளனர். கொரோனா மீண்டும் பரவி வருவதால் திருமண நாள் கொண்டாட்டங்களை விமர்சையாக கொண்டாடாமல், குறிப்பிட்ட நண்பர்களை மட்டும் விழாவுக்கு அழைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகத்திலே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள் இவர்கள்தான். இதுதொடர்பாக டோஸ்ஃ பேஸ்கர் கூறுகையில் ‘இவர்தான் எனக்கான கணவர் என்றும். இவர்தான் எனக்கான ஆண் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எங்களின் திருமணம் வரலாறு படைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று கூறினார்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை முதல் முறையாக சட்டரீதியாக அங்கீகரித்த நாடு நெதர்லாந்துதான். 2000 ஆம் ஆண்டு இதற்கான தீர்மானமானது நெதர்லாந்த் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நெதர்லாந்தை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா , மெக்சிகோ, தெற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட 29 நாடுகள் 2001 ஆம் ஆண்டு தன் பாலின திருமணம் சட்டரீதியாக அங்கீகரித்தது. இந்தியாவில் இதுவரை தன் பாலின திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.