உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் கூறியுள்ளார்.
தேவி மூவிஸ் – மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில், கதாநாயகன் மதுர் மிட்டலுடன், முத்தையா முரளிதரன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அவர் கிரிக்கெட் விளையாடியது படமாக்கப்பட்டது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘800’ படத்தில் 30 சதவிகிதம் கிரிக்கெட் பற்றியும், யாருக்கும் தெரியாத தனது வாழ்க்கை பற்றியும் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில், அக்டோபர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாகக் கூறிய அவர், இந்தியா திறமையான நாடு என்றும், கிரிக்கெட்டில் வெற்றி பெற, அதிர்ஷ்டமும் சந்தர்ப்பமும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். நடப்பாண்டு உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.







