125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவு

இந்தியாவில் 125 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் 125 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 482ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரேநாளில் 52 லட்சத்து 67 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.