நாடு முழுவதும் ஜேஇஇ மூன்றாம் கட்ட தேர்வுகள் இன்று தொடங்கியது.
கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த ஜேஇஇ மூன்றாம் கட்ட தேர்வுகள் கொரோனா 2வது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.
வரும் 22, 25, 27 ஆகிய தேதிகளிலும் ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. வெளிநாடுகள் உட்பட 334 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 7 லட்சத்து 9 ஆயிரத்து 519 பேர் எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உட்பட 15 நகரங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. கணினி வழித்தேர்வாக நடைபெறும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்கள் ஹால் டிக்கெட்டுடன் தேர்வில் பங்கேற்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.







