நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் நேற்று மட்டும் புதியதாக 25,326 கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 84 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரே நாளில் 25,326 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த வாரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 150 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி 28-ம் தேதிக்கு பிறகு இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா எண்ணிக்கை அதிகாரித்துவருகிறது. இங்கு மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதியதாக 15,602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.