நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,97,00,313 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 1,03,570 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைவோரின் எண்ணிக்கை 2,84,91,670 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றால் 2,330 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 3,81,903 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் கோவிட் – 19 தொற்றால் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,26,740 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 71 நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது. நாட்டில் 26,55,19,251 பேர் தடுப்பூசி செலுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







