முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அங்கிருந்து அவர் மேற்கொள்ள உள்ள பயணங்களின் முழு விவரம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, டெல்லிக்கு காலை 10 மணி அளவில் அவர் சென்றடைந்தார் .

அவருக்கு அங்கு அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து சாணக்கிய புரியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்ப்பில் மரியாதை அளிக்கப்படுகிறது.

பின்னர், மாலை 5 மணிக்கு லோக் கல்யாண்மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். சந்திப்புக்கு பின்பு டெல்லி ITO பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மீண்டும் சாணக்கிய புரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 8 மணிக்கு ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை மரியாதை நியமித்தமாக சந்திக்கிறார்.

Advertisement:

Related posts

திமுகவில் சேருகிறாரா குஷ்பு?

Halley karthi

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

Nandhakumar

இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்

Jeba Arul Robinson