முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

 

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு தற்போது 30 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47 கோடியே 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

Ezhilarasan

அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக எண்ணுகிறது: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi

கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன், த்ரில்லர்.. ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார் சீனு ராமசாமி

Gayathri Venkatesan