ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

“அந்த மனசு தான் கடவுள்” – ஒலிம்பிக்கில் ஒரு நெகிழ்ச்சி தருணம்


தென்றல் பிரபாகரன்

கட்டுரையாளர்

வெற்றிக்கனியை எட்ட களத்தில் மல்லுக்கட்டும் எந்த வீரனும் பதக்கத்தை பங்குபோட ஆசைப்படமாட்டான். அவ்வாறு நடக்குமானால், அந்த நிகழ்வை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடும். அப்படி ஒரு சம்பவம் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரங்கேறியுள்ளது.

உயரம் தாண்டுதல் போட்டியின் ஆடவர் பிரிவில் இத்தாலி வீரர் டம்பேரி மற்றும் கத்தார் நாட்டின் முத்தா எஸ்ஸா பர்சிம் ஆகிய 2 வீரர்களிடையே தங்கப் பதக்கத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு எனும் பழமொழிக்கு ஏற்ப இருவரும் விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்டியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இருவீரர்களும், 7 அடி 10 அங்குலம் உயரம் வரை தாண்டிவிட்டனர். இதற்கு அடித்தபடியாக, 3 முறை முயற்சி செய்தும் 2 பேராலும் அந்த உயரத்தை கடக்க முடியவில்லை. இதற்கிடையே, இத்தாலி வீரர் டம்பேரி காலில் சிறு காயமடைந்து சற்று சோர்வடைந்தார்..

அப்போது, Tie breaker சுற்று போலாமா அல்லது தங்க பதக்கத்தை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்களா என்ற கேள்வியை முன்வைக்கிறார் நடுவர். இருவரில் பதக்கம் வெல்ல கத்தார் வீரர் முத்தா எஸ்ஸா பர்சிமுக்கே வாய்ப்பு அதிகம். ஆனால், நொடிப்பொழுதில் அவர் செய்த செயல், ஒலிம்பிக் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையச் செய்துள்ளது.

வெற்றிமுகத்தில் இருந்தும், தங்கப் பதக்கத்தை பங்குபோட தயார் என முத்தா எஸ்ஸா பர்சிஸ் அறிவித்தது தான் அதற்கு காரணம். நாடு, மொழி, மதங்களை கடந்து இருநாட்டு வீரர்களும், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த காட்சி சமூக வைரலாக பரவி வருகிறது. “அன்பே சிவம்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த ‘மனசுதான் சார் கடவுள்’ என கமல்ஹாசன் பேசும் வசனத்துடன் ஒப்பிட்டு, இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்

Advertisement:
SHARE

Related posts

தேர்வில் சினிமா பாடல் எழுதிய மாணவன்; ஆசிரியர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!

Halley karthi

மாநிலப்பட்டியலில் கல்வி; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Halley karthi