செய்திகள்

கோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் ஆகியவை காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் மட்டுமே செயல்படும். சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

மால்கள், பன்னாட்டு வணிக வளாகங்கள் ஆகியவையும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வரும் நாளை முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர்

Gayathri Venkatesan

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Vandhana

அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan