மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 19 மாநிலங்களில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, சட்டீஸ்கர், பீகார், குஜராத் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், தெலங்கானா, சண்டிகர், லடாக், டையூ-டாமன் ஆகிய தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் தீவுகளிலும் பாதிப்பு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
அதேநேரத்தில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடுபுதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஜம்மு காஷ்மீர், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, அருணாச்சல பிரதேச மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
13 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்பும், 6 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பாதிப்பும் தினசரி பதிப்பாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 17 மாநிலங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் வரை தொற்று பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.