முக்கியச் செய்திகள் தமிழகம்

’இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள்’: முதல்வர் ஸ்டாலின்

உலக செவிலியர் தினத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து சபாநாயகராக அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். இந்நிலையில் இன்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டில் ‘பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள்!’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்

Halley karthi

விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

Nandhakumar

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!

Halley karthi