விஜய் நடித்த கில்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.
நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகர் மாறன். இவர் டிஷ்யூம், பட்டாசு, தலைநகர், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்க் கான பாடல்கள் கச்சேரியும் செய்துவந்துள்ளார்.
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.







