நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 ஆயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 71 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 2 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும், இதுவரை 22 கோடியே 41 லட்சத்து 9 ஆயிரத்து 448 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







