நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், இன்று அதிரடியாக நேற்றைய பாதிப்பை விட சுமார் 12 ஆயிரம் பேர் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைவிட அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,25,12,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 34,169 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,17,54,281 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 648 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,35,758 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 61,90,930 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 59,55,04,593 ஆக உயர்ந்துள்ளது.








