நடுவானில் சென்னை, பெங்களூரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம், கட்டுப்பாட்டு அறையின் நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு ஏா்ஏசியா இந்தியா விமானம், கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. வழக்கமாக அங்கிருந்து புறப் படும் விமானங்கள், பாவ்நகா் வழியாகச் செல்வது வழக்கம்.
ஆனால், இந்த விமானம், மும்பை விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள், தரையிறங் கும் பாதையில் சென்றது. அப்போது, பெங்களூரில் இருந்து இண்டிகோ விமானம் எதிரில் வந்தது.
இரு விமானங்களும் ஒரே உயரத்தில், அதாவது தரையில் இருந்து 38,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. இதையடுத்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து, எச்சரிக்கை கொடுக்கப்பட்டதை அடுத்து, ஏா்ஏசியா விமானத்தின், பறக்கும் உயரம் 38,396 அடியாக உயா்த்தப்பட்டது.
இதனால் நேருக்கு நேர் மோத இருந்த விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமான விபத்து விசாரணைக் குழுவின் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








