முக்கியச் செய்திகள் இந்தியா

2-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு!

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 27-வது நாளாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 27 லட்சத்து 76 ஆயிரத்து 96 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் தொற்று பாதிப்பு விகிதம் 4.66 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், குணமடைவோர் விகிதம் 94.55 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.22 சதவீதமாகவும் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

விவேக் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்

Karthick