கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 823 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும், இதுவரை 17 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.