இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது. நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர்…

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது.

நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடர், இன்று மாலை 7 மணி அளவில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள் : சினிமா பாணியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிராண்டட் காலணிகள் திருட்டு: 3 பேர் கைது!…

இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன.  இதன் முதல் ஆட்டம் இன்று  நவி மும்பையில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இந்திய மகளிர் அணி டி20 தொடரில்  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில்  களம் காண காத்திருக்கிறது. 

அதனைத்தொடர்ந்து, டி20 வடிவில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.