#IndependenceDay – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

78வது சுதந்திர தினவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 18வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்கள்…

#IndependenceDay - Greetings Leader of Opposition Edappadi Palaniswami!

78வது சுதந்திர தினவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன், நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.