நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று (ஆக. 15) தேசியக்கொடி ஏற்றி, உரையாற்ற இருக்கிறார். இவ்விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.







