இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளை, 100 சதவீத பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்படவுள்ளது.







