அமேசான் நிறுவனரும். தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் , நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜெஃப் பெசோஸ் கடந்த பிப்பிரவரியில் பதவி விலகப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அவர் பதவி விலகியுள்ளார். இதனையடுத்து ஜெஃப் பெசோசுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1994ல் ஆன்லைனில் புத்தக விற்பனைக்காக தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போது உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், தற்போது பதவி விலகிய பெசோஸ் தனது ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்தை நிர்வகிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிறுவனம் விண்வெளி பயணத்திற்காக உருவாக்கப்பட்டதாகும்.
பெசோஸ் உலகின் 22வது பணக்காரர் என ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







