முக்கியச் செய்திகள் தமிழகம்

100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!

அருப்புக்கோட்டை அருகே தனியார் விற்பனை நிலையத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி டோக்கன் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், வாடிக்கையாளர்களை கவர சிறப்பு கூப்பன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாகனங்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. 50 சிறப்பு டோக்கன்களை சேகரித்து வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, டோக்கன்களை வாங்கி செல்கின்றனர். மேலும், ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 50 பைசா தள்ளுபடி டோக்கன் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் விற்பனை நிலையத்தில் வழங்கப்படும் புதிய சலுகை வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கான விருதுகள்!

Jayapriya

சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jayapriya

பண்டாரத்தி புராணம் பாடல்: மாரி செல்வராஜ் விளக்கம்!

Niruban Chakkaaravarthi