இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். அதே வேளையில், இங்கிலாந்து அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் அதனால், அந்த போட்டியை காண ரசிகர்களிடையே ஆர்வம் மிகுந்துள்ளது.