“என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சு

என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள், ஆனால் நான் விலைபோகவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. இதில்,…

என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள், ஆனால் நான் விலைபோகவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பொதுச்செயலாளர் முருகானந்தம், துணை தலைவர்கள் பொன்ராஜ், மகேந்திரன் மற்றும் பழ. கருப்பையா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தேர்தலில், இலவசம், ஜாதி, மதம், பணபலம் ஆகியவற்றால் சில வியாபாரிகள் விலைக்கு வாங்க வருகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ் பேச முடியவில்லையே என சிலர் வருந்துகின்றனர். தேர்தல் காரணமாக அவர்களுக்கு தமிழ் மீது திடீர் பாசம் வந்துள்ளது என தெரிவித்தார். மேலும், அவர் எங்கள் மொழியைப் பற்றி பேசினால் மட்டும் மக்கள் வாக்களித்துவிடுவார்களா என்று கேள்வி எழுப்பினார். கடைசியாக எங்களுடன் இனி வர வேண்டியவர்கள் யோசிக்காதீர்கள் என தெரிவித்த அவர், இன்னும் 3 நாட்கள் நேரம் கொடுக்கிறேன் நாம் சேர்ந்து பிரச்சாரத்திற்கு போகலாம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.