தன் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி கங்கனா ரனாவத் மனு

தன் மீதான கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி நடிகை கங்கனா ரனாவத் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத், மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீஸ் குறித்து விமர்சனம் செய்திருந்தார். மேலும், சமூக…

தன் மீதான கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி நடிகை கங்கனா ரனாவத் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத், மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீஸ் குறித்து விமர்சனம் செய்திருந்தார். மேலும், சமூக வலைதளப்பக்கங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதையடுத்து கங்கனா மீதும், அவர் சகோதரி ரங்கோலி மீதும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தன் மீதும், தன் சகோதரி மீதும் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்  இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு மாற்ற கோரி, உச்சநீதிமன்றத்தில் கங்கனா மனுதாக்கல் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.