அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு மாநில சுகாதார முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீப சில…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு மாநில சுகாதார முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீப சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிகப்பட்டு சிகிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதி நிலவரப்படி 257 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் மாநில சுகாதார துறை மாநில செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 15ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 3264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 8ம் தேதியின் படி 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 15ம் தேதி நிலவரப்படி 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட அளவில் தாலுகா அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அண்மைச் செய்தி : வெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!

கொரோனா எங்கு அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருவோர்களை சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.