வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியானது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்குத் தற்காலிகமாக NC22 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியானது.
நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாலும், படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருவதாலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. படம் வருகிற மே மாதம் 12ஆம் தேதி வெளிவர இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
https://twitter.com/vp_offl/status/1636327377155526658?s=20
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் நாகசைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போலீசாக நாகசைதன்யா கலக்கியுள்ளார். மேலும், வில்லனாக அரவிந்த் சாமி மற்றும் சரத்குமாரும் இடம்பெற்றுள்ளனர்.







