நாகலாந்து மாநிலத்தின் வயதான மூதாட்டி காலமானார்.
நாகலாந்து மாநிலம், கோஹிமா மாவட்டம், கிக்விமா கிராமத்தைச் சேர்ந்தவர் புப்பிரிய் புஃப்கா. அவரது வயது 121. அந்த மாநிலத்திலேயே மிகவும் வயதான நபர் என்று அறியப்பட்டவர். அதே கிராமத்தைச் சேர்ந்த விச்சப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். 18 பேரக்குழந்தைகள், 56 கொள்ளுப் பேரக் குழந்தைகள், 12 எள்ளுப் பேரக் குழந்தைகளுடன் சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1969ம் ஆண்டு கணவனை இழந்தார். அவரது 4 குழந்தைகளும் இறந்துவிட்டனர். 1982ம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே அவரது வயது உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது அவருக்கு 80 வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. 80 வயதிலேயே பார்வையை இழந்தாலும் அதிக நியாபக சக்தியை கொண்டவர். 3 போர்கள், பஞ்சங்கள், குடும்ப நிகழ்வுகள் அனைத்தையும் சமீப காலம் வரை நினைவுகூறி வந்ததாக சொல்லப்படுகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புஃப்கா நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நாகலாந்து மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவர் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு.” என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.
-ம.பவித்ரா