முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களுடன் ஒப்பிடும் போது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. ஒமிக்ரான் வைரஸ் பெல்ஜியம், நைஜீரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க், கனடா, ஜப்பான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய நிலையில், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 75 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 6 ஆயிரத்து 531 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 315 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 141 பேர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாற்றுதிறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை!

G SaravanaKumar

நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்- வி.கே.சசிகலா

G SaravanaKumar

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

Web Editor