முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து 23 நாடுகளுக்கு பரவியது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்டவற்றை விட இது அதிக வீரியம் கொண்டது. இது 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தொற்றின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.  இதையடுத்து அனைத்து நாடுகளும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக விமான நிலையங்களை பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட நபர் தென்னாப்பிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பியவர் என அமெரிக்க அரசு தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார். மேலும், அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியபோதும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டு மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

Gayathri Venkatesan

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Vandhana

பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

Halley Karthik