வருமான வரி துறையின் புதிய வலைதளத்தை பயன்படுத்துவதில் இன்னும் சிலருக்கு சிக்கல்கள் நீடிப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருமான வரி துறைக்கு உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. http://www.incometax.gov.in என்ற இந்த இணையதளம் வரி செலுத்துவோரின் வசதிக்காக பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ளதாக நிதி யமைச்சக அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். இன்போசிஸ் நிறுவனம் உருவாக் கிய இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பயன்படுத்த முடியாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இதை சரிசெய்ய இன்போசிஸ் நிறுவனத்துக்கு நிதியமைச் சகம் கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வருமான வரி துறை யின் புதிய வலைதளத்தை பயன்படுத்துவதில் இன்னும் சிலருக்கு சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. வருமான வரி துறையின் புதிய வலைதளத்தில் கோடிக் கணக்கான வரி செலுத்துவோா் வெற்றிகரமாக பரிவா்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றும் வலைதளத்தில் உள்ள சிக்கல்களை களைவதற்காக இன்ஃபோசிஸ் வருமான வரி துறை யுடன் இணைந்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித் துள்ளது.
விரைவில் சிக்கல்கள் சரி செய்யப்பட்டு வரி செலுத்துவோா் பயன்பாட்டுக்கு இந்த தளம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.








