முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.100 கோடி மதிப்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி

தமிழ்நாட்டில், 100 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 100 கோடி ரூபாயில், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரூராட்சி கள் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 56 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிப்பு

Gayathri Venkatesan

காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவு

Ezhilarasan

தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது – துணை வேந்தர் வேல்ராஜ்

Jeba Arul Robinson