முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா: 318 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும் அதிகரித்தது. ஏற்ற இறக்கமாக இருந்து வந்த கொரோ னா, இப்போதும் அப்படியே இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றால் 31,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 318 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,368 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,542 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,48,273 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,00,162 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் புதிதாக 19,682 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து தொற்றுப் பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. கேரளாவில் ஒரே நாளில் 152 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 84,15,18,026 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 72,20,642 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம்!

Ezhilarasan

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba Arul Robinson

சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

Halley karthi