தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது : ஆர்எஸ்எஸ் தலைவர்

தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி அன்று…

தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் சார்பில் நிறுவன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு விஜயதசமி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே. பி. ஹெட்கே, எம்எஸ் கோல்வால்கர் ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்எஸ்எஸ் வீரர்களின், சாஸ்த்ர பூஜைக்கான (SHASTRA POOJA ) அணிவகுப்பு மரியாதையை மோகன் பகவத் பார்வையிட்டார்.

பின்னர் விழாவில் பேசிய மோகன் பாகவத் கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கொள்கை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை அனைவருக்கும் சமமாக வகுக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பிரச்சனையாக மாறி இருக்கிறது.

நாட்டின் பிரிவினை சோகமான வரலாறு. இழந்த ஒருமைப்பாடு, ஒற்றுமையை மீட்டெடுக்க பிரிவினை வரலாற்றின் உண்மையை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். பிரிவினையை விரிவுபடுத்தும் கலாசாரத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், நாட்டை ஒன்றிணைத்து அன்பை ஊக்குவிக்க வேண்டும்.

தliபான்களின் வரலாறு நமக்கு தெரியும். அவர்களுக்கு சீனாவும் பாகிஸ்தானும் இப்போது ஆதரவு அளிக்கின்றன. தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது. நமது எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஓடிடி தளங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொரோனாவுக்கு பிறகு சிறுவர்களிடம் கூட செல்போன்கள் உள்ளன. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை நாம் எப்படி தடுப்பது? இதுபோன்ற தொழில்களில் கிடைக்கும் பணம் தேச விரோத செயல் களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கட்டுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.